உக்ரைன் முழுவதும் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடாத்தியதில் இரண்டு பேர் கீவில் உயிரிழந்துள்ளதாக அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் இருக்கலாம்,” என்று டெலிகிராம் செய்தியிடல் செயலியில் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
இதேவேளை, ரஷ்ய ஏவுகணை வீழ்ந்ததால், தலைநகர் கீவின் சில பகுதிகள் மின்சாரம் இல்லாமல் இருந்தன என்று மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறியுள்ளார்.
ஏற்கனவே இரண்டு மணித்தியாலத்திற்கும் மேலாக வான் எச்சரிக்கைகள் நீடித்த நிலையில், கீவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகள் பாரிய ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.