ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், விக்ரமின் கடின உழைப்பில் பொங்கலுக்கு வெளிவந்த படம் ஐ. இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
ஆனால், விக்ரமின் நடிப்பால் அந்த குறைகள் எல்லாம் மறைந்து போனது. தற்போது வந்த தகவலின் படி இப்படம் இதுவரை ரூ 227 கோடி வசூல் செய்துள்ளதாம்.
இதில் தமிழகத்தில் ஐ படம் நல்ல லாபத்தை கொடுத்துள்ளதாம், விநியோகஸ்தர்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை, ஆனால், ஆந்திராவில் இப்படம் தோல்வியை சந்தித்துள்ளது.
குறிப்பாக வட இந்தியாவில் படுதோல்வி அடைந்துள்ளது. கேரளா, கர்நாடாகவில் ஓரளவு நல்ல வசூல் தான் வந்துள்ளதாம். வெளி நாடுகளில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்துள்ளது, அதனால், பாக்ஸ் ஆபிஸில் இந்த வருடம் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.