உங்களுக்கு எந்த இடத்தில் கொழுப்பு அதிகம்? அதை எப்படி குறைப்பது?

180

fat_burn001-w245

ஒருவரது உடலில் கொழுப்புகள் இருப்பது நல்லது என்றாலும், அளவுக்கு அதிகமாக கொழுப்புகள் இருந்தால் உடலமைப்பு மிகவும் அசிங்கமாக தான் தெரியும்.

மேலும், அளவுக்கு அதிகமான கொழுப்புகள் இருப்பதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இது குறித்து, ஆராய்ச்சியில் ஈடுப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, ஒருவரது உடலின் குறிப்பிட்ட பகுதியில் கொழுப்புகள் தேங்குவதற்கும், அவரது பழக்கவழக்கங்களுக்கும் அதிக தொடர்பு உள்ளது என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஐந்து வகையான உடலமைப்புக்களைக் குறித்தும், அந்த உடலமைப்புக்களைக் கொண்டவர்கள் எந்த மாதிரியான செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வயிறு மற்றும் தோள்பட்டை பகுதி

போதிய உடலுழைப்பில் ஈடுபடாதவர்களுக்கு உடலின் மேல் பகுதியான கைகள், உடலின் மேல் பகுதியான கைகள், தோள்பட்டை, மார்பு, வயிறு போன்ற இடங்களில் கொழுப்புக்கள் அதிகம் ஏற்படுகிறது.

இத்தகைய உடலமைப்பை பெற்றவர்கள் தினமும் 500-1000 கலோரிகளை உட்கொள்ள வேண்டும்.

மேலும், கார்டியோ உடற்பயிற்சிகள் மற்றும் சில சிட்-அப் மற்றும் புஷ்-அப்களை வாரத்திற்கு 5 நாட்கள் 30-60 நிமிடம் வரை செய்ய வேண்டும்.

அடிவயிற்று பகுதி

கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோனின் உற்பத்தி அதிகமாக இருப்பதால் இப்பகுதியில் கொழுப்பு அதிகமாக சேருகிறது.

இத்தகைய உடலைமைப்பை கொண்டவர்கள் தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதுடன், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

மேலும், இவ்வாறான உடலமைப்பை பெற்றவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். எனவே, மது அருந்தும் பழக்கத்தை கைவிட்டு உடனடியாக மருத்துவரை அனுக வேண்டும்.

பின்பகுதி

பின்பகுதியான முதுகு பகுதி அடிவயிறு, தொடை மற்றும் பிட்டப் பகுதி ஆகிய இடங்களில் கொழுப்புகள் அதிகமாக இருப்பதற்கு போதிய உடலமைப்பு இல்லாததே காரணமாகும்.

இப்பகுதியில் உள்ள கொழுப்புகளை குறைக்க ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்வதுடன், தினமும் கலோரிகள் இல்லாத உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

மேலும், தினமும் நீச்சல், வாக்கிங், ரன்னிங் மற்றும் சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

கால், பிட்டம் மற்றும் அடிவயிற்றுப் பகுதி

பிரசவிக்கும் பெண்களுக்கு தான் இந்த பகுதியில் அதிகமாக கொழுப்பு சேரும்.

இவ்வாறான உடலமைப்பை பெற்றவர்கள் தினமும் சைக்கிளிங் செய்வதுடன் உடலின் கீழ் பகுதிக்கான பயிற்சியை செய்வது மிகவும் நல்லது.

– See more at: http://www.manithan.com/news/20161215123492#sthash.EUv4Trp6.dpuf

SHARE