உங்களுக்கு ஐஸ் கட்டியை முகத்தில் தேய்க்கும் பழக்கம் உள்ளதா? முதல்ல இதைப் படிங்க

125

அலைச்சல், தூக்கமின்மை, தூசி, மாசுக்கள் போன்றவற்றால் நம்முடைய முகம் மிக வேகமாகவே பொலிவை இழந்து விடுகிறது. வியர்வையினால் நம் முகம் வாடிவிடுகிறது. எவ்வளவு அழகு குறிப்புகளை முயற்சி செய்து பார்த்தாலும் பயன் என்னவோ பூச்சியம் தான்.

ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்த வெயில் காலத்திலும் உங்கள் சருமத்தை பாதுகாக்கும் எளிய பொருள் உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் உள்ளது. உங்கள் சருமத்தில் உள்ள பருக்கள் மங்க வேண்டுமா? அல்லது நீங்கள் போடும் மேக்கப் ரொம்ப நேரம் நீடிக்க வேண்டுமா? ஐஸ் கட்டி தான் தீர்வு. உங்களுடையது எந்த வகையான சருமமாக இருந்தாலும் சரி, ஐஸ் கட்டி மேஜிக் போல உங்கள் சருமத்தில் மாயம் செய்யும்.

சருமத்தில் ஐஸ் கட்டிகளை தேய்க்கலாமா?

நாள் முழுவதும் அலைந்து வேலை செய்வதால் உடலும் சருமமும் சோர்ந்து விடுகிறது. சருமத்தின் சோர்வுகளை ஐஸ் கட்டி கொண்டு நீக்கி விடலாம். இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி முகத்தை ஐஸ் பொலிவு பெற செய்யும். ஐஸ் பேஷியல் தான் தற்போதைய டிரெண்டிங்காக உள்ளது. கொரிய தீபகற்பத்தில் பிரபலமான இந்த பேஷியல் தற்போது உலகெங்கும் பரவி வருகிறது.

பயன்கள்

சருமம் பொலிவு பெற

ஐஸ் கட்டியை முகத்தில் தேய்ப்பதால் இரத்த ஓட்டம் அதிகமாகி முகம் பளிச்சென்று ஆகிவிடும். ஐஸ் கட்டியை தேய்ப்பதால் இரத்த குழாய்கள் முதலில் சுருங்கி இரத்த ஓட்டம் குறையும்.

கருவளையம் நீங்க

நமது முக அழகை கெடுக்கும் கருவளையங்களை ஐஸ் கட்டி கொண்டு விரட்டி விடலாம். இதற்கு நீங்கள் சிறிதளவு ரோஸ் வாட்டரை கொதிக்க வைத்து பின்னா் அதில் வெள்ளரிக்காய் சாறு கலந்து இதை ஐஸ் ட்ரேயில் வைத்து ஃபிரிசரில் வைத்து விடுங்கள். இதை முகத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால் கருவளையம் ஓடிவிடும்.

முகப்பரு மறைய.

உங்கள் முக அழகை முகப்பரு கெடுக்கிறதா? கவலை வேண்டாம். ஐஸ் கட்டியை முகத்தில் தடவுவதால் சருமத்தில் உற்பத்தியாகும் எண்ணெய் பசை குறையும். அதனால் முகப்பருவும் மறையும். அதுமட்டுமல்ல முகப்பருவினால் ஏற்படும் வலி மற்றும் வீக்கங்களையும் ஐஸ் கட்டி குறைக்கும்.

கண் சோர்வு நீங்க..

கண்கள் சோர்ந்து காணப்படும் போது முக அழகே கெட்டு விடும். இதை போக்க கண்ணின் விழி ஓரத்திலிருந்து ஆரம்பித்து மேற்புறம் கண் இமை வரை ஐஸ் கட்டி கொண்டு வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும். இது வீக்கங்களையும் குறைக்கும்.

நுண்துளைகளை அடைக்க..

நமது முகத்தில் மிக மெல்லிய நுண்துளைகள் இருக்கும். இது இயற்கையாகவே எண்ணெயை மற்றும் அழுக்குகளை வெளியேற்றி முகத்தை தூய்மையாக்கும். ஆனால் ஏதேனும் அழுக்கு இந்த துளைகளை அடைத்து விட்டால் அது பருக்களை ஏற்படுத்தும். அதனால் ஐஸ் கட்டி கொண்டு முகத்தை தேய்க்கும் போது இந்த துளைகள் சுருங்கி அழுக்கு வெளியேறி முகம் பொலிவு பெறும்.

முகச்சுருக்கம் மறைய..

நம்மால் வயது ஆவதை தடுக்க முடியாது ஆனால் மறைக்க முடியும். ஐஸ் கட்டி கொண்டு முகத்தில் தேய்ப்பதால் ஏற்கனவே உள்ள முக சுருக்கம் மறையும் மேலும் புதிதாக சுருக்கங்களும் விழாது.

உதடுகள்

உங்கள் உதடுகள் வறண்டு உள்ளதா? கவலை வேண்டாம். ஐஸ் கட்டி கொண்டு உதடுகளை தேய்க்க வேண்டும். இதனால் உதடுகள் மென்மையாக மாறும். அதுமட்டுமல்லாமல் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

SHARE