உங்களை அழிக்கும் உணவுகள்!

265

625-500-560-350-160-300-053-800-748-160-70-4

இன்றைய அவசர காலத்தில் பலரும் பாஸ்ட் புட் உணவுகளை அதிகமாக விரும்புகின்றனர்.

நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக் சாப்பிடுவதில்லை.

இதனால் நம்மில் பலரும் பலவிதமான நோய்கள் பாதிக்கப்படும் சூழ்நிலைகளை அடைகின்றோம்.

நம் உடலுக்கும் தீங்குகள் தரக்கூடிய உணவுப் பொருட்களை நாம் தெரிந்துக் கொண்டு அந்த வகை உணவுகளை நாம் முற்றிலும் தடுப்பதால், பல நோய்களின் தாக்கத்தில் இருந்து நாம் எளிமையாக பாதுகாத்துக் கொள்ளலாம்.

பிட்சா
பிட்சா

பிட்சா ஆரோக்கியம் அற்ற உணவுப் பொருட்களில் ஒன்றானது.பிட்சாவில் நம் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் கெட்ட கொழுப்புக்கள், ஸ்டார்ச் மற்றும் இதர சர்க்கரைகள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இந்த வகை உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்தை மெதுவாக அழித்து, நாளடைவில் இறப்பு ஏற்படும் சூழ்நிலையை உருவாக்குகின்றது.

பட்டர் பாப்கார்ன்
பட்டர் பாப்கார்ன்

நம்மில் பலரும் பொழுதுபோக்கு ஸ்நாக்ஸாக வாங்கி சாப்பிடும் பாப்கார்ன் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவு வகையில் ஒன்றானது.இந்த பாப்கார்னை சாப்பிடுவதால், நம் உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகிறது.

கொழுப்பு நிறைந்த பால்
கொழுப்பு நிறைந்த பால்

பால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.ஆனால் கொழுப்பு நிறைந்த பாலில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், நம் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து விடுகிறது.எனவே கொழுப்புக்கள் நிறைந்த பாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பேக்கரி பிரட்
பேக்கரி பிரட்

பேக்கரியில் விற்கப்படும் பிரட்களில் சர்க்கரை, கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் அதிகமாக நிறைந்துள்ளது.எனவே நாம் இந்த பிரட்டை சாப்பிட்டால், இதய நோய் மற்றும் புற்றுநோய் நம்மை எளிதாக தாக்கி விடுகிறது.

ஐஸ் க்ரீம்
ஐஸ் க்ரீம்

ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களில் ஐஸ் க்ரீம் மிகவும் மோசமான உணவாகும்.இதில் அதிகமான சர்க்கரை மற்றும் ஏராளமான கொழுப்புக்கள் அதிக அளவிலும் உள்ளது.எனவே இதனை உட்கொண்டால், உடல் பருமன் அதிகரிப்பதோடு, பலவிதமான நோய்கள் நம்மை மிகவும் எளிதாக தாக்குகிறது.

சோடா
சோடா

சோடா போன்ற பானங்களில் கலோரிகள் மற்றும் அசிடிக் அமிலம் அதிகமாக உள்ளது.எனவே நாம் இந்த பானத்தை குடிப்பதனால், சர்க்கரை நோய் போன்ற பலவிதமான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

உருளைகிழங்கு சிப்ஸ்
உருளைகிழங்கு சிப்ஸ்

உருளைக் கிழங்கு சிப்ஸ் போன்ற அனைத்து சிப்ஸ் வகைகளும் எண்ணெயில் பொரிக்கப்படுகிறது.இதனால் இந்த சிப்ஸில் அதிகமான கலோரிகள், ஸ்டார்ச் மற்றும் கொழுப்புக்கள் இருபக்கிறது.எனவே இந்த உருளைகிழங்கு சிப்ஸ், புற்றுநோயை ஏற்படுத்த காரணமாக உள்ளது.

டோனட்ஸ்
டோனட்ஸ்

டோனட்ஸ் சர்க்கரை, சாச்சுரேட்டட், கொழுப்புக்கள் போன்றவை அதிகம் நிறைந்த உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுப் பொருளாக உள்ளது.மேலும் இந்த டோனட்ஸில் சுமார் 400 கலோரிகள் உள்ளது.எனவே இதை நாம் சாப்பிட்டால் பலவிதமான நோய்கள் நம்மை எளிதாக தாக்குகிறது.

SHARE