உங்கள் கையில் 7 இலட்சமா? பரகுவே நாட்டின் பிரஜாவுரிமை உங்களுக்குதான்…

241

download
அமெரிக்க போன்ற நாடுகளில் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வது என்பது இலகுவான காரியமல்ல ஆனால் மிக இலகுவாக பிரஜாவுரிமையை வழங்குவதற்கு தென் அமெரிக்க நாடு ஒன்று முன்வந்துள்ளது.

தென்அமெரிக்காவின் பரகுவே நாடே இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.

பரகுவே நாட்டிற்குள் 50,000 டொலர்களை செலுத்தி வங்கிக் கணக்கை ஆரம்பிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு அந்த நாட்டின் பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் பெறுமதியில் 7 இலட்ச ரூபாயினை பரகுவேயின் வங்கியில் வைப்பிலிடும் நபர்களுக்கு வங்கிகளில் கடிதம் ஒன்று வழங்குவதாகவும், இதனைக் கொண்டு இலகுவாக அந்த நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான அறிவித்தல் ஆனது இந்த http:// nomadcapitalist.com இணையத்தளத்தில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்ளும் நபர்களுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கப்படுவதுடன், இதன் மூலம் அதிகம் பிரதிபலன்களை அனுபவிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கடவுச்சீட்டுக்கள் மூலம் தென்அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கான விசாவினை இலகுவாகப் பெற்றக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE