உங்கள் வயிறு பானை போன்று இருக்கிறதா? இதை படிங்க..

190

எளிதில் யாராலும் உடல் எடையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியாது. ஆனால் நமது தவறான உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் வயிறு பானை போல பெரிதாக வாய்ப்புள்ளது. சில உணவுகள் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் செய்து எளிதாக வீங்கிய வயிற்றை சரி செய்ய முடியும்.

மன அழுத்தம் உடல் எடையை அதிகரிக்க செய்யும். எப்போதும் மன அழுத்தத்துடன் இருந்தால் ஹார்மோன் மாறுதல்கள் ஏற்படும். மேலும் மன அழுத்தம் செரிமான பிரச்சனையை உண்டாக்கும்.

இதனால் வயிறு வீங்கும். காலை கடன் தினமும் இரண்டு முறை மலம் கழிக்காமல் இருந்தாலோ அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் சிறுநீரை வெளியேற்றாமல் இருந்தாலோ வயிறு வீங்கும்.

இதனை தடுக்க, சூப், தண்ணீர், ஜீஸ் போன்றவற்றை பருகலாம். க்ளூட்டன் சகிப்புத்தன்மை பலர் தங்களுக்கு இருக்கும் க்ளூட்டன் சகிப்புத்தன்மையை சாதாரணமாக நினைத்து விட்டுவிடுகிறார்கள்.

ஆனால் இப்பிரச்சனை இருந்தும், க்ளூட்டன் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், வயிறு உப்புசத்தால் சிரமப்பட கூடும். இதை தவிர்க சில வாரங்கள் க்ளூட்டான் நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருங்கள்.

வேக வேகமாக சாப்பிடுவது உணவை எப்போது நன்றாக மென்று சாப்பிட வேண்டும். ஆனால் உணவு உண்பதற்கு கூட நேரம் இல்லாததால் பலர் நன்றாக மென்று சாப்பிடுவதில்லை.

இதனால் காற்று உள்ளே சென்று விடும். இதனால் வயிறு உப்புசம் உண்டாகிறது. போதுமான அளவு தண்ணீர் தினமும் நமது உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். இல்லையென்றால் இது வயிறு உப்புசத்தை உண்டாக்கி வயிற்றை குண்டாக்கி காட்டும்.

SHARE