உங்க உடம்பில் உள்ள இரத்தத்தின் அளவை கூட்ட வேண்டுமா? இந்த மூலிகை சாற்றை குடிங்க..!

349

மனிதன் உயிர் வாழ்வதற்கு இரத்தம் மிகவும் ஒரு முக்கிய பொருளாகும்.

குருதிச்சிறுதட்டுகள் நம் உடம்பில் கோடி எண்ணிக்கையில் இருக்கிறது. அதுவே நம்மை உயிரோட்டமுள்ள ஆரோக்கியமான மனிதர்களாக வைத்திருக்கிறது.

அந்தவகையில் அமிழ்தவள்ளி (Tinospora Cordifolia) என்கிற அமிர்த மூலிகையும் (Giloy herb) குருதிச்சிறுதட்டுகளின் எண்ணிக்கை கூட்டும் வல்லமை பெற்றவை என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

இந்த மூலிகை நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதோடு ஒவ்வாமை போன்ற பிணிகளில் இருந்து பெரிய நிவாரணத்தை தருகிறது.

இந்த மூலிகையின் வேரில் இருந்து தான் சாறைப் பிழிந்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

தற்போது அவற்றை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானவை
  • அமிழ்தவள்ளி வேர்கள் – 4 செ.மீ நீளமுள்ள 4 முதல் 5
  • துளசி இலைகள் – 4 முதல் 5
  • தண்ணீர் – 2 முதல் 3 டம்பளர்
செய்முறை

இரவில் அமிழ்வள்ளி வேரை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அந்த நீரோடு துளசி இலைகளை கிள்ளி போட்டு 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் விட்டு அந்த மூலிகை நீரை கொதிக்க விடவேண்டும்.

அதன் பின்னர் மூலிகை வேர் நீர் பதியாக வற்றும் வரை கொதிக்க விடவேண்டும்.

பிறகு அந்த வேர் நீரை குளிர வைத்து நாளைக்கு 2 அல்லது 3 முறை அருந்த வேண்டும்.

இது இரத்தத்தில் உள்ள மேக்ரோஃபேஜஸை வலிமையாக்கி வெளியில் இருந்து தொற்றுக்களை ஏற்படுத்தும் கிருமிகளை தடுக்கிறது.

SHARE