“உங்க ரெண்டு பேரை நம்பிதான் என் படமே இருக்கு…” என்று கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இயக்குநர் நெல்சன் கூறியிருக்கிறார்.
நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா” திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இயக்குநர் நெல்சன் இயக்கிவரும் ‘டொக்டர்’ என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல நாளிதழ் ஒன்று Most Desirable Man என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலாவதாக சிவகார்த்திகேயன், இரண்டாவதாக அனிருத் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள நெல்சன், “உங்க ரெண்டு பேரை நம்பிதான் என் படமே இருக்கு…. கொஞ்சம் பார்த்து பண்ணுங்க… என்று கூறியிருக்கிறார்.