உச்சக்கட்ட கோபத்தில் மஹிந்த! காரணம் ஏன் தெரியுமா?

218

1043953432makinda

இலங்கை அரசியலின் அண்மை கால மாற்றங்களினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடும் கோபமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தன் கட்சி சார்ந்த உறுப்பினர்களின் செயற்பாடுகள் மஹிந்த ராஜபக்சவுக்கு கடும் மன அழுத்தங்களை கொடுத்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவு அண்மையில் குருநாகலில் வெகு சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் இடம்பெற்று முடிந்தது.

மாநாடு மிகவும் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டமை மற்றும் மாநாட்டில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டமை தொடர்பில் மஹிந்த ராஜபக்ச தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கட்சி மாநாட்டில் கலந்துகொள்ளாது மலேசியா சென்றிருந்த மஹிந்த ராஜபக்ச நேற்று நாடு திரும்பியிருந்தார்.

எனினும் தன்னை வரவேற்பதற்காக விமான நிலையம் வந்திருந்த கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது மஹிந்த கோபம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“நீங்கள் எல்லோரும் என்னை ஏமாற்றி விட்டீர்கள், 5000 பேரேனும் மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார்கள் என கூறினீர்கள். எனினும், ஐந்து லட்சம் பேர் வரை வந்தது எப்படி?

நான் கூறும் எதனையும் நீங்கள் சரியாக செய்வதில்லை என, தன்னை வரவேற்க வந்த கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களை சாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE