உடற்பயிற்சிக்கு சென்றபோது கொடூரமாக சுட்டு கொல்லப்பட்ட நீதிபதி

229

625-500-560-350-160-300-053-800-748-160-70-2

மெக்ஸிகோ நாட்டில் பட்டப்பகலில் உடற்பயிற்சிக்கு சென்ற நீதிபதி ஒருவர் துப்பாக்கியால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த Joaquin ‘El Chapo’ Guzmen என்ற போதை பொருள் கடத்தல் மன்னனை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொலிசார் கைது செய்தனர்.

ஆனால், இந்த கைதிற்கு முன்னதாக முதல் முறையாக சிறையில் அடைத்தபோது சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சிறையில் இருந்து தப்பியுள்ளான்.

எனினும், இவரை பிடிக்க சர்வதேச பிடிவாரண்ட் விடுத்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டார்.

மெக்ஸிகோ நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இவரது வழக்கை Vicente Bermudez Zacarias(37) என்ற நீதிபதி விசாரணை செய்து வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன் தினம் நீதிபதி வீட்டை விட்டு வெளியேறி உடற்பயிற்சிக்காக சாலையில் ஜாக்கிங் சென்றுள்ளார்.

அப்போது, நபர் ஒருவர் நீதிபதியை பின் தொடர்ந்து ஓடியுள்ளார்.

சில வினாடிகளுக்கு பிறகு நீதிபதியின் பின் தலையில் துப்பாக்கியை வைத்த அந்த நபர் கொடூரமாக சுட்டு விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

உயிருக்கு போராடிய நீதிபதியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உடற்பயிற்சிக்கு சென்ற நீதிபதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவத்திற்கு மெக்ஸிகோ நாட்டு ஜனாதிபதி கடும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

எனினும், நீதிபதி விசாரணை செய்து வரும் கடத்தல் மன்னனுக்கும் இக்கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE