
.
மனச் சிதைவு ஏற்படக் காரணம், மூளையில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடலிலும் ஏற்படும் கோளாறுகளே என, 1919ல் ஜெர்மானிய உளவியலாளர் எமில் கிரேபெலின் கருதினார். ஆனால், இன்று வரை, மனச் சிதைவு நோயாளிகளுக்கு, அந்த நோய்தான் உடல் முழுவதும் பல நோய்களை உண்டாக்குவதாக உளவியல் மருத்துவர்கள் கருதுகின்றனர்.
ஆனால், ‘மாலிக்யூலர் சைக்கியாட்ரி’ இதழில், லண்டன் கிங்ஸ் கல்லுாரி ஆராய்ச்சியாளர்கள் பதிப்பித்துள்ள ஒரு ஆய்வு, கிரேபினின் கருத்து சரி என்கிறது. அதாவது, உடலில் ஏற்படும் பல நோய்களின் விளைவாகவே, ‘ஸ்கிட்சோபெர்னியா’ எனப்படும் மனச்சிதைவு ஏற்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.