மழைக்காலங்களில் மிகவும் எளிதாக கிடைக்கும் கொய்யா பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
மழைக் காலங்களில் எளிதில் நோய்த் தொற்றிவிடும் என்பதால் தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் வைட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகளும் அடங்கியுள்ளன. இப்பழத்தை கொண்டு சுவையான துவையல் செய்தும் சாப்பிடலாம். தேவையான பொருட்கள் அதிகம் பழுக்காத கொய்யா துண்டுகள் (தோல், விதை நீக்கியது) – 3 பச்சை மிளகாய் – தலா 4, கொத்தமல்லி – சிறிதளவு, எலுமிச்சை – 1, தேங்காய் துருவல், உப்பு – சிறிதளவு. செய்முறை கொய்யா துண்டுகளை பச்சை மிளகாய், தேங்காய் துருவல், கொத்தமல்லி, எலுமிச்சை சாறுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்க வேண்டும், சில நிமிடங்கள் கழித்து இறக்கிவிட வேண்டும். இனிப்பு, புளிப்பு, காரம் இருப்பதால், சாதத்துக்கு மட்டுமின்றி சப்பாத்தி, சாண்ட்விச், உப்புமா என சகல சிற்றுண்டிகளுக்கும் தொட்டுக்கொள்ளலாம். |