உடலுக்குப் புத்துணர்ச்சியை தரும் நார்த்தம்பழம்.

207

நார்த்தம்பழம் புளிப்புச் சுவையுடையது. இது ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றைப் போன்று சிட்ரஸ் பழ வகையைச் சேர்ந்ததாகும்.

உடலுக்குப் புத்துணர்ச்சியை தரும் நார்த்தம்பழத்தில் கால்சியம், மக்னீசியம், தாது உப்புக்கள், வைட்டமின்கள் என ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

நார்த்தம்பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.

இதயநோய்கள்

நார்த்தம்பழத்தில் ஒரு துளியளவும் கொழுப்பு இல்லை என்பதால், இயல்பாகவே இதய நோய்களுக்கான ஆபத்தைத் தவிர்க்கிறது.

இதில் முழுக்க முழுக்க நன்மை தரும் ஊட்டச்சத்துக்கள் மட்டுமே அடங்கியுள்ளதால் இதய நோயாளிகளும் மற்றவர்களும் பயப்படாமல் தினமும் சாப்பிடலாம்.

கால்சியம்

உடலுக்குத் தேவையான ஒரு நாளினுடைய கால்சியம் அளவில் 60 சதவீதத்துக்கும் மேலான கால்சியத்தை ஒரு பெரிய சைஸ் நார்த்தம்பழத்தில் இருந்து பெற முடியும்.

அதனால் தினமும் ஒரு நார்த்தம்பழத்தை ஜூஸ் வடிவில் எடுத்துக் கொள்வது நலம் பெயர்க்கும்

உடல் பருமன்

நார்த்தம்பழத்தில் பொதுவாகவே கலோரிகள் மிக குறைவாக இருப்பதால் உடல் பருமனாவதை தடுக்க உதவுகிறது. கொழுப்பைக் கரைத்து உடல் எடையை கச்சிதமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் தினமும் உணவில் நார்ச்சத்து நிறைந்த நார்த்தம்பழத்தை சேர்த்து கொள்ளலாம்.

உயிரணுக்கள்

உயிரணுக்களின் உற்பத்தியிலும் உயிரணுக்களை வளமுடையதாக ஆக்குவதிலும் நார்த்தம்பழம் சிறப்பாக செயல்படுகிறது. இந்த அற்புதமான பழம் புற்றுநோய், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைகிறது.

சிறுநீரக கற்கள்

நார்த்தம்பழம் சிறுநீரக கல் உருவாவதை தடுக்கிறது. பொதுவாக சிறுநீரகக் கல் வந்தபின், வாழைத்தண்டை அரைத்துக் குடிப்போம். ஆனால், நார்த்தம்பழமோ எவ்வளவு வேகமாக சிறுநீரகக் கல்லை கரைக்க முடியுமோ அவ்வளவு வேகமாகக் கரைத்துவிடும்.

வாய் துர்நாற்றம்

வைட்டமின் பி அதிக அளவில் நார்த்தம்பழத்தில் உள்ளதால், இது வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது. மேலும் பற்கள் மற்றும் ஈறுகள் குறித்த பிரச்னைகளில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது

SHARE