உடலில் தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் எப்போதும் இளமை மற்றும் கட்டுக்கோப்பாக இருக்க இயற்கையில் உள்ள அற்புதமான தேநீர் இதோ!
தேவையான பொருட்கள்
- தேயிலை தூள்
- எலுமிச்சை
- துளசி இலை
- ஏலக்காய்
- கிராம்பு பட்டை
- பனை வெல்லம்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து அதில் தேயிலை தூள், எலுமிச்சை சாறு, துளசி இலைகள், ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
பின் ஒரு கப்பில் இந்த டீயை ஊற்றி அதில் பனை வெல்லம் (அ) தேன் சேர்த்து நன்கு கலந்தால்தேநீர் தயார்.
குறிப்பு
உடல் எடையைக் குறைக்கும் தேநீரைக் குடிக்கும் போது, காய்கறிகள் சாலட் மற்றும் பழங்கள் நிறைய ஜூஸ்களை குடிக்கலாம்.
ஆனால் கொழுப்பு நிறைந்த எண்ணெய் மற்றும் பால் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.