உடல் எடையை குறைக்க இந்த 3 நாடுகளில் என்ன சாப்பிடுகிறார்கள் தெரியுமா?

86

உடல் எடையை பேணுவதற்க உலகின் பல இடங்களில் கையாளும் முறைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

சீனா

சீன மக்கள் உடல் எடை குறைந்தவர்களாகவும், அந்த எடையை பேணுவதிலும் அக்கறை காட்டிவருகின்றனர்.

அவர்கள் தினமும் முட்டைக்கோஸ், கரட், சிவப்பு மிளகாய், தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து தயாரிக்கப்படும் சூப்பினை தினமும் 3 அல்லது 4 வேளைகள் பருகி வருகின்றனர்.

சூப்புடன் கலோரிகள் குறைந்த உணவை உட்கொள்கின்றனர். தினமும் இந்த சூப்பினை எடுத்து கொள்வதனால் அவர்களால் உடல் எடையை பேண முடிகிறது.

தாய்லாந்து

தாய்லாந்து மக்கள் உடல் எடையைக் குறைவாக வைத்திருப்பதற்கு காரமான் உணவினை உட்கொள்கின்றனர். அவர்களது உணவில் பச்சை, சிவப்பு மிளகாய் அதிகம் சேர்த்து காரமாண உணவாக தயாரித்து உட்கொள்கின்றனர்.

பல ஆய்வுகளில் காரமான உணவுகள் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை கட்டுப்பாடாக வைத்திருக்க உதவுகின்றதாம். உடல்களை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதில் தாய்லாந்து மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

பிரேசில்

பிரேசில் நாட்டு மக்கள் எடையை கட்டுபாடாக வைத்திருப்பதற்கு சமைத்த பீன்ஸை எல்லா உணவுகளிலும் சேர்க்கின்றனர்.

பீன்ஸில் உள்ள அதிகளவான புரோட்டின் கொழுப்புகளை கரைக்க உதவுகின்றது. எனவே பீன்ஸை பயன்படுத்துவதனால் எடையை குறைக்க முடியும். பீன்ஸில் உடலுக்குத் தேவையான அனைத்து போசாக்கு நிறைந்த புரோட்டின் இருக்கின்றது.

SHARE