உணவு சாப்பிடுவதில் கட்டுப்பாட்டுடன் இருப்பதை தான் நாம் டயட் என்று கூறுகின்றோம். அத்தகைய டயட் முறையில் உடல் எடையைக் குறைக்க மத்தி மீன் பெரிதும் உதவுகிறது.
சமீபத்தில் ஜப்பானில் உள்ள கியோட்டோ எனும் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் மீன் டயட் மேற்கொள்வதால் உடலில் இருக்கும் கொழுப்பை கரைப்பதுடன், அதிக கொழுப்பு சேராமல் தடுக்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் மீன் மற்றும் மீன் எண்ணெய் உடலில் கொழுப்பை சேமிக்கும் செல்களை, கொழுப்பை கரைக்கும் செல்லாக மாற்றி, உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் இதர நன்மைகள்
- நீரிழிவு நோய் உள்ளவர்கள் மத்தி மீன் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாகி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
- மத்தி மீனில் இருக்கும் கால்சியம் சத்து எலும்புகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் நல்ல பலனளிக்கிறது.
- மத்தி மீனில் இருக்கும் விட்டமின் B12 உடலில் இருக்கும் ஹோமோசைஸ்டீன் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்கள் பாதிப்படைவதை தடுக்கிறது.
- மத்தி மீனில் இருக்கும் அயோடின் சத்து முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது.
- மத்திமீனை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதால், கண்பார்வை குறைபாடுகள் நீங்கி. பார்வை திறனை அதிகரிக்கச் செய்கிறது.
- மத்தி மீன் எண்ணெய் செரிமானம், நரம்பு மண்டலம் மற்றும் வளர்ச்சிதை மாற்றங்கள் போன்றவற்றை ஊக்குவிக்கிறது.