உடல் எடையை குறைப்பது என்பது எல்லார்க்கும் கடினமான விஷயம். மேலும் உடல் எடையை குறைய வெந்தயத்தைப் எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.
வெந்தயம் எப்படி உடல் எடையைக் குறைக்கிறது?
வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுத்து உடலின் மெட்டபாலிச அளவை ஊக்குவித்து அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கின்றது.
வெந்தயத்தில் உள்ள காலக்டோமானன், மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரையச் செய்யும்.
வெந்தயம் வயிற்றை நிரப்பி, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் வெந்தயத்தில் உள்ள ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் உடல் பருமனடைவதைத் தடுக்கும்.
வெந்தயத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்
வெந்தய நீர்
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 வெந்தய பொடியை சேர்த்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
முளைக்கட்டிய வெந்தயம்
முளைக்கட்டிய வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
வெந்தய டீ
வெந்தய டீயுடன் பட்டைத் தூள் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் உடல் எடையையும் குறைக்க உதவும். குறிப்பாக இது செரிமானத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
ஊற வைத்த வெந்தய நீர்
ஒரு கையளவு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டிவிட்டு, வெந்தயத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.
வெந்தயம் மற்றும் தேன்
ஒரு டம்ளர் நீரில் வெந்தயப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, அதில் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து காலையில் எழுந்ததும் குடித்தாலும் உடல் எடை குறையும்.