இன்றையச் சூழலில் சிறியவர்கள், பெரியவர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை உடல் பருமன். உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தாததுதான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். மேலும் நமது உடலில் இருக்கும் சில ஹார்மோன்களும் கூட நமது உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணிகளாக விளங்குகின்றது. நம்மில் சிலர் துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளை கண்டபடி தின்றுவிட்டு எடை கூடியபிறகு டயட் என்ற பெயரில் உணவைக் குறைத்துக் கொள்ளுவதும் ஜிம் சென்று கடினமாக உடற்பயிச்சிகளை மேற்கொண்டு உடல் எடையினை குறைப்பது வழக்கம்.
உண்மையில் உடல் எடை அதிகரிக்க என்னதான் காரணம் என்பதை பார்ப்போம்.
மெனோபாஸ் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைந்துவிடும். இது குறைவதனால் உடல் பருமன் உண்டாகாது. மாறாக உடலில் நீர் தங்கி, உடல் பருமனை தந்துவிடும்.
உடல் பருமனுக்குப் பரம்பரை ஒரு முக்கியக் காரணம். பெற்றோருக்கு உடல் பருமன் இருக்குமானால், மரபுரீதியாக அடுத்த தலைமுறைக்கு இது கடத்தப்படுகிறது.
சில மாத்திரைகளின் பக்கவிளைவாகவும் உடல் எடை அதிகரிக்கலாம். ஹார்மோன் மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகள்.
உண்ணும் உணவுக்கேற்ப நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என ஏதாவது ஒரு பயிற்சியை மேற்கொண்டு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
எத்தனையோ வழியில், எவ்வளவோ பேர் எடையைக் குறைக்க ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
வீட்டில் உட்கார்ந்தாலே உடல் எடை கூடிவிடும்.அவர்கள் தினமும் உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.