உடுவில் மாணவர்களின் ஆர்ப்பாட்டமானது திட்டமிடப்பட்ட ஒரு செயல். வட்டுக்கோட்டை யப்னா கொலிஜ் (Jaffna college) அதிபர் டேவிட்.எஸ்.சலமொன்

276

 

இதனுடைய உண்மைத் தன்மை என்னவென்று தினப்புயல் இணையத்தளம் வினவியபொழுது..
மிசநெறி பாடசாலைகளின் விவகாரத்தில் மத்திய அரசோ வடமாகனசபையோ தீர்த்துவைக்க முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த வட்டுக்கோட்டை யப்னா கொலிஜ் (Jaffna College) அதிபர் டேவிட்.எஸ்.சலமொன்

uduvil
எமது பாடசாலையில் எமது நிர்வாகத்தைத் தவிர வேறு எவருமே தலையிடமுடியாது. அப்படியாக இருந்தால் இதனுடைய உண்மைத் தன்மை என்ன எப்படி அதனைச் சீர்செய்யமுடியும்? அறுபது வயதைக் கடந்துவிட்டால் ஒரு ஆசிரியர் ஓய்வு பெறவேண்டும். அதான் அரசாங்கத்தினுடைய கட்டளை. அவ்வாறான ஒரு செயற்பாடுதான் இங்கும் இடம்பெற்றது. பழைய அதிபருடைய பதவிக்கு புதியவர் நியமனம் செய்யப்பட்டுவிட்டார். இவ் மாற்றமானது திட்டமிட்ட சதிமுயற்சிகளோ வேறு தனிப்பட்ட பழிவாங்கள்களோ இல்லை.

ஒய்வு பெறுபவருக்கு ஓய்வு வழங்குவது எமது கடமை. தனியார் பாடசாலையினுடைய சட்டத்தின்படி அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓய்வு பெறவேண்டும். அதனையே நாமும் செய்துள்ளோம். இதன்பின்னணியிலிருந்து செயற்படுபவர்கள் குறித்த அதிபரும் அவருக்கு சார்பான மாணவர்களும் தான். ஒருமுறை யாழ் ஆயர் அந்தப் பாடசாலைக்கு சமூகமளித்த பொழுது ஒழுங்கான முறையில் அவர் வரவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

images
அப்படியாக இருந்தால் குறித்த அதிபருக்கு எதிரான செயற்பாட்டில் எம்.பி. சுமந்திரன் சம்பந்தப்பட்டிருக்கின்றார் என்பதை நீங்கள் மறுக்கின்றீர்களா? எந்தவகையான தொடர்புகளும் இல்லை. ஆனால் சட்டபூர்வமான சில வேலைகளை மேற்கொள்வதற்கு இனி அவருடன் தொடர்பு கொள்ளலாம் என மேலும் அவர் தெரிவித்தார்.
இப் பாடசாலையில் இந்து, கிறிஸ்தவம் என்ற பிரச்சினை எழுப்பப்பட்டு வரும் நிலையில் இதில் என்ன உண்மைத் தன்மை இருக்கின்றது? அப்படிப் பாகுபாடு இல்லை இதில் அதிகமாக இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். இந்து மாணவர்கள் அதிகமாகக் கல்வி கற்றாலும் கிறிஸ்தவர் ஒருவரே அதிபராகக் கடமையாற்றி வருகின்றார். இவ்வாறான நிலையில் இப் பாடசாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு குறித்த ஆசிரியர்களால், குறித்த அதிபராலும் சரியான அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை என்பது எனது குற்றச்சாட்டு. இது தொடர்பாக பொலிசாரோடும், அசிரியர்களோடும் நாம் அவ்விடத்திற்குச் சென்று நிலமைகள் இவ்வாறு தான் என்ற விளக்கத்தைக் கொடுத்திருந்தோம், ஆனால் குறித்த மாணவர்கள் தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

uduvil-1
இது தொடர்பாக யாழ்மாவட்டப் பேர் ஆயர் தெளிவான விளக்கமொன்றை ஊடகங்களுக்குக் கொடுத்திருந்தார். இவ்வாறான நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக புதிய அதிபரைக் கொண்டு பாடசாலையின் நாளாந்த செயற்பாட்டை மேற்கொள்வதற்கு முயற்சி எடுத்து வருகின்றோம். அதே நேரம் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்குச் சார்பாக நூற்றுக் எழுபத்தைந்து மாணவர்கள் செயற்படுகின்றனர். அதே நேரம் ஆசிரியர்களும் பங்காற்றி வருகின்றனர். பாடசாலையை இயக்கவிடாது மேலும் பிரச்சனைகள் வருகின்ற பொழுது நாம் சட்டபூர்வமான நடவடிக்கைகளைத் தான் மேற்கொள்ள முடியும்.

uduvil_school-1
மேலும் இப்பாடாசாலைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதே நேரம் யாழ்மாவட்டப் பேர் ஆயர் சட்டபூர்வமாகவே இவ் அதிபரை அவரது ஓய்வு விடயம் தொடர்பில் கையாண்டு இருக்கின்றார். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
இதிலொரு முரண்பாடு என்னவென்றால் கடந்த காலத்தில் பணியாற்றிய அதிபர்கள் அறுபத்தைந்து, அறுபத்தாறு, அறுபத்தெட்டு வயது வரையும் கடமையாற்றியிருக்கின்றனர். ஆனால் தற்பொழுது அதற்கான சட்ட ஒழுங்கு எமது மிசனெறியால் கொண்டுவரப்பட்டுள்ளது அறுபது வயதுக்கு பின்பு ஓய்வூதியம் கொடுக்கவேண்டும் என்பது. யுத்த சூழ்நிலையால் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களும் அக்காலத்தில் கடமையாற்றி இருந்தனர். ஆனால் தற்பொழுது சுமுகமான நிலமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை வைத்துத்தான் ஒய்வூபெற்றவர்களை மீண்டும் பணியாற்றுமாறு இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறிவருகின்றனர்.

uduvil_school02
இறுதியாக நான் கூறிக்கொள்வது என்னவென்றால் பாடசாலைக் கல்வியில் வீன் குழப்பத்தை உண்டுபன்னாமல் ஆசிரியர்களும், மாணவர்களும் வழமைபோன்று பாடசாலை நடவடிக்கைகள் செயல்ப்படுத்தப்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார். வட்டுக்கோட்டை யப்னா கொலிஜ் (Jaffna College) அதிபர் டேவிட்.எஸ்.சலமொன்

SHARE