அண்மையில் உயிரிழந்த மாதுலுவாவே சோபித தேரர் உயிரிழந்தமை தொடர்பில் உடுவே தம்மாலோக்க தேரரிடம் வாக்குமூலம் பெற அவரை இன்று குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைத்துள்ளனர்.
சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் சாஹல ரட்நாயக்க இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நீதிக்கான அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் இயற்கையாக மரணமாகவில்லை அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உடுவே தம்மாலோக்க தேரர் தெரிவித்திருந்தமை தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உடுவே தம்மாலோக்க தேரரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது
உடுவே தம்மாலோக்க தேரர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
மாதுளுவாவே சோபித தேரரின் மரணமடைந்தது சந்தேகத்திற்குரியது என உடுவே தம்மாலோக்க தேரர் கூறியிருந்தார். இது சம்பந்தமாக வாக்குமூலம் பெறவே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
ஹெலன் மெத்தினியாராம விகாரையில் குட்டி யானை ஒன்றை சட்டவிரோதமான முறையில் வளர்த்து வந்த குற்றச்சாட்டில், உடுவே தம்மாலோக்க தேரர் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டு பிணையில் விடுக்கப்பட்ட உடுவே தம்மாலோக்க தேரர், மாதுளுவாவே சோபித தேரர் இயற்கையாக மரணிக்கவில்லை, அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியிருந்தார்.
இதனையடுத்து, மாதுளுவாவே சோபித தேரரின் மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பொலிஸ் மா அதிபர் ஊடாக உத்தரவிட்டிருந்தார்.
சோபித தேரர் இறந்து 4 மாதங்களுக்கு மேல் சென்றுள்ள நிலையில், தம்மாலோக்க தேரர், புதிய சர்ச்சையை கிளப்பி இருப்பது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கி வரும் தம்மாலோக்க தேரர் போன்றோர், தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மக்களை திசை திருப்பும் நோக்கில் இவ்வாறு உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பு தெரிவித்திருந்தது.