உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.அனுமதிப்பத்திரம் இன்றி யானைக் குட்டியொன்றை வைத்திருந்தார் என உடுவே தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் மற்றும் 21ம் திகதிகளில் கொழும்பு உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.நீதவான் நிசாங்க பந்துல கருணாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.உடுவே தம்மாலோக்க தேரர் கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.