உடைக்க முடியாத ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரையை வடிவமைக்கும் சாம்சுங்

229

தற்போது பாவனையில் உள்ள ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரைகளில் கொரில்லா கிளாஸ் வகை தொடுதிரைகள் பலம் வாய்ந்தவையாக இருக்கின்றன.

எனினும் இவற்றின் மீது சற்று அதிகமான விசையினை பிரயோகிக்கும்போது உடையக் கூடியன.

இப்படியிருக்கையில் இலகுவில் உடையாத மிகவும் வலிமை வாய்ந்த தொடுதிரையினை உருவாக்கும் முயற்சியில் சாம்சுங் நிறுவனம் இறங்கியுள்ளது.

OLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட இத் தொடுதிரைகள் மெல்லியவையாக உருவாக்கப்பட்டுள்ள போதிலும் உடைக்க முடியாதவையாக இருக்கின்றன.

அதோபோன்று பரிசோதனையின்போது 1.2 மீற்றர் மற்றும் 1.8 மீற்றர்கள் உயரத்தில் இருந்து தரையில் விழுத்திய போதிலும் எவ்விதமான உடைவுகளும் ஏற்பட்டிருக்கவில்லை.

இத் திரைகள் அடுத்த வருடம் அறிமுகம் செய்யப்படவுள்ள Samsung Galaxy S10 மற்றும் S10 Plus ஆகிய கைப்பேசிகளில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE