உடையார் கட்டு குளத்துக்கு ஒரு தொகுதி மீன்குஞ்சுகள் வைப்பிலிடப்பட்டது – வடக்கு மீன்பிடி அமைச்சர் வைப்பிலிட்டார்…

360

 

முல்லைத்தீவு மாவட்ட உடையார்கட்டு விசுவமடு நன்னீர் மீன்பிடியாளர் சங்கத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு 24-07-2015 வெள்ளி காலை 10 மணியளவில் உடையார்கட்டு குளத்துக்கு ஒதுக்கப்பட்ட 60இ000 நன்னீர் மீன்குஞ்சுகளில் ஒரு தொகுதி முதலக்கட்டமாக இன்று குளத்தில் வைப்பிலிடப்பட்டது.

இன் நன்னீர் மீன்பிடியாளர்களை ஊக்குவிக்கும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரின் திட்டத்திற்கு அமைவாக இன்றையதினம் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுஇ இன் நிகழ்வில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும் கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன் அவர்களும் தேசிய நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் விரிவாக்கல் அதிகாரி திரு.செ.சலிவன் அவர்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் அமைச்சர் தனது உரையில் வட மாகாணத்தில் உள்ள அனைத்து நன்னீர் மீன்பிடி சமூகங்களையும் வாழ்வாதாரத்தில் உயர்த்தும் நோக்கோடு தாம் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் எதிர் காலத்தில் நீங்கள் கேட்காமலே சங்கங்களுக்கான ஓய்வு மண்டபம் தளபாடங்கள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

unnamed (19) unnamed (20) unnamed (21) unnamed (22) unnamed (23) unnamed (24)

SHARE