உணர்வுபூர்வமாக ‘தியாக தீபம் திலிபனின்’ 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு அனுஸ்ரிப்பு

138
-மன்னார் நகர் நிருபர்-
 
தியாக தீபம் திலிபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று புதன்கிழமை(26) மன்னாரில் இரு இடங்களில் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலிபன் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் நகர மண்டபத்தின் கேட்ப்போர் கூடத்தில் தியாக தீபம் திலிபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இடம் பெற்றது.
காலை 10.48 மணியளவில் தியாக தீபம் திலிபனின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி,மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் போது சர்வமதத்தலைவர்கள், வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,சட்டத்தரணி பா.டெனிஸ்வரன்,மன்னார் நகர முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன், நகரசபை உறுப்பினறும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ரெட்ணசிங்கம் குமரேஷ் மற்றும் நகர சபை உறுப்பினர் மைக்கல் கோலின் ஏனைய நகர,பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு தியாக தீபம் திலிபனின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையிலும் காலை 10. 48 மணியளவில் மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்றுள்ளது.
இதன் போது தியாக தீபம் திலிபனின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி ,மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த உணர்வு பூர்வமான நிகழ்வில்  மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் மற்றும்,மத தலைவர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
SHARE