உணவகத்தில் ஆர்டர் செய்த மகள்அ. சந்து போன தாய்!

197

அமெரிக்காவில் காது கேளாத இளம்பெண் ஒருவரிடம், உணவகத்தில் பணிப்பெண் கைஅசைவின் மூலம் வாதாடிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் நார்த் கொரொலினா பகுதியில் உள்ள உணவகத்திற்கு தாய் மற்றும் மகள் சென்றுள்ளனர்.

இதில் தாயின் பெயர் புல்மென் என்றும் மகளின் பெயர் சிந்தியா வால்கர்(20) என்றும் அவருக்கு காது கேட்காது என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக சிந்தியாவின் தாயார் உணவகத்திற்கு செல்லும் போது சிந்தியாவிடம் கைஅசைவின் மூலம் என்ன வேண்டும் என்று கேட்பார்.

அது போல தற்போது இவர்கள் சென்றுள்ள உணவகத்தில் அவரின் தாயார் கைஅசைவின் மூலம் கேட்டுக் கொண்டிருந்த போது, உணவகத்தில் பணிபுரிந்த பணிபெண் ஒருவர், சிந்தியாவிடமே கைஅசைவின் மூலம் என்ன வேண்டும் என்றும், அதை புரிந்து கொண்டு அப்பெண்ணுக்கு தேவையானதை கொடுத்ததும் போன்ற வீடியோவை சிந்தியாவின் தாயார் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இது குறித்து சிந்தியாவின் தாயார் கூறியிருப்பதாவது, ஒரு உணவகத்திற்கு செல்லும் போது, என் மகளுக்கு தேவையான உணவை நானே தான் பதிவு செய்வேன்.

அது அவளுக்கு சற்று சங்கடமாக இருந்ததைப் போன்று உணர்ந்தாள், ஆனால் தற்போது இருவரும் சென்ற உணவகத்தில் என் மகளுக்கு தேவையானதை அவளே பதிவு செய்தது என்னை உணர்ச்சிவசப்படுத்தியது மற்றும் ஆச்சரியமாகவும் இருந்தது என கூறியிருந்தார்.

மேலும் அப்பணிப்பெண்ணின் பெயர் அனிஷ் எனவும், அவர் உறவினர் ஒருவர் காது கேளாமல் உள்ளார், அவரிடம் இருந்து தான் அனிஷ் பழகியதாக, உணவகத்தில் பணி புரியும் பெண் ஒருவர் தெரிவித்தார்.

இதே போன்று அனைத்து உணவகத்திலும் இருந்தால், காது கேளாதவர்களுக்கு சற்று எளிதாக இருக்கும் எனவும் சிந்தியாவின் தாயார் கூறியதாக தெரிவித்தனர்.

625.0.560.320.500.400.194.800.668.160.90

SHARE