உணவின் நிறத்தை வைத்து அதன் நன்மைகளை தெரிந்துக் கொள்ளலாம்

229

உணவின் நிறத்தினை வைத்து அதனுடைய ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

பச்சை நிற உணவுகள்

பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கீரை வகைகள், குடைமிளகாய், கிவி மற்றும் க்ரீன் டீ ஆகியவை பச்சை நிற உணவு வகையை சேர்ந்தது. இந்த வகை உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள், நம் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேற்ற உதவுகிறது.

மஞ்சள் நிற உணவுகள்

வாழைப்பழம், ஸ்குவாஷ் , சோளம், ஆகியவை மஞ்சள் நிறமுள்ள உணவு வகையை சேர்ந்தது.

இதில் கரோடெனாய்டு மற்றும் பயோ ஃப்ளாவனாய்டு அதிகம் நிறைந்திருப்பதால் அவை சருமம், எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

ஆரஞ்சு நிற உணவுகள்

காரட், ஆரஞ்சு, பரங்கிக்காய் ஆகியவை ஆரஞ்சு நிறமுள்ள உணவு வகையை சேர்ந்தது.

இந்த வகை உணவுகள் நோயெதிர்ப்பு மண்டலம், இதயம், கண்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

சிவப்பு நிற உணவுகள்

சிவப்பு மிளகாய் மற்றும் குடைமிளகாய், செர்ரி பழம், தக்காளி, ஆப்பிள் ஆகியவை சிவப்பு நிறமுள்ள உணவு வகையை சேர்ந்தது.

இந்த வகை உணவுகளில் நிறைந்துள்ள விட்டமின் சத்துக்கள் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

ஊதா நிற உணவுகள்

வெங்காயம், நாவல் பழம், கத்திரிக்காய், திராட்சை ஆகியவை ஊதா நிற உணவு வகையை சேர்ந்தது.

இந்த வகை உணவுகள் அல்சர் நோய், புற்றுநோயை எதிர்த்து, சிறுநீரக நோய்த்தொற்று ஏற்படுவதை தடுத்து இதயம் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

SHARE