உணவுகளை உரமாக்கும் சாதனை பெண்

272

பிரேசிலில் பெர்னான்டா டெனிலான் என்ற பத்திரிக்கையாளர் குப்பைகளில் வீணாக கொட்டப்படும் உணவுப்பொருட்களை சேகரித்து உரமாக்கி பயன்படுத்தி வருகிறார்.

பிரேசிலின் மிகப் பெரிய நகரமான சாவோ பாலோவில் பெரும்பாலான உணவுகள் வீணடிக்கப்படுகின்றன.

இதனை சரிசெய்யும் முயற்சியில் தற்போது களத்தில் குதித்துள்ளார் பெர்னான்டா டெனிலான் என்ற முன்னாள் பத்திரிக்கையாளர்.

இதற்காக உணவகங்களுக்குச் சென்று அங்கு வீணாகும் உணவுப் பொருட்களை சேகரிப்பதுடன் அதை உரமாக மாற்றுகிறார்

பின்னர் அந்த ஹோட்டல்களின் வளாகத்தில் தோட்டம் அமைத்து உரமாக பயன்படுத்தவும் உதவுகிறார்.

அதுமட்டுமின்றி வீடுகளுக்கும் கொடுக்கிறார், தற்போது மாதத்திற்கு 30 முதல் 40 டன் குப்பைகளை இவரது குழுவினர் உரமாக்கித் தருகின்றனராம்.

SHARE