உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக 40ற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து இலங்கை மனித உரிமை செயலகத்தில் அணி திரண்டுள்ளனர்.

283

 

உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக 40ற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து இலங்கை மனித உரிமை செயலகத்தில் அணி திரண்டுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் மனித உரிமை செயலக அதிகாரிகளிடம் காணாமல் போனோர் தொடர்பில் கேட்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தமது உறவுகள் காணாமற் போயுள்ளதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டின் விசாரணைகள் தற்போது எந்த கட்டத்தில் உள்ளது தொடர்பாகவும், கடந்த 8 வருடங்களாக மக்களுக்கான பதில் வழங்கப்படாமைக்கான காரணம், மற்றும் வவுனியாவில் காணாமற் போனோரின் விபரங்களையும் கேட்டறிந்துள்ளனர்.

காணாமற் போனோரின் விபரங்கள் தங்கள் அலுவலகத்தில் காணப்படுகின்றதா.? இவ்விடயம் தொடர்பில் எத்தனை முறைப்பாடுகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன, மேலதிகாரிகளின் கவனத்திற்கு காணாமற் போனோரின் விபரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதா? போன்ற விடயங்களையும் கேட்டறிந்துள்ளனர்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் மேலதிகாரிகளிடம் தொடர்புக்கொண்டு கலந்துரையாடியதன் பின்னர் மேலதிக விபரங்களை தெரிவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE