உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று சனிக்கிழமை தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டனர்.

290

 

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று சனிக்கிழமை தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டனர்.

download magazin 255ws

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் எம்.பி. தலைமையிலான குழுவினர் இன்று காலை 10.30 மணிக்கு மகஸின் சிறைச்சாலைக்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு நண்பகல் 12 மணிவரை இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, நீதியமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன்போது கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி, தமக்கு வழங்கிய உறுதி மொழி குறித்து சம்பந்தன் எம்.பி.அரசியல் கைதிகளுக்கு தெளிவுபடுத்தினார். இதையடுத்து தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிடுகின்றனர் என அவர்கள் சம்பந்தனிடம் தெரிவித்தனர். நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் தமது விடுதலை குறித்து நிரந்தரத் தீர்வு எட்டப்படவேண்டும் என்றும் இல்லையேல் மறுநாள் நவம்பர் 8ஆம் திகதி முதல் மீண்டும் உண்ணாவிரத்ததில் ஈடுபடுவர் என தம்மைச் சந்தித்த கூட்டமைப்புக் குழுவிடம் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்தனர். ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் கைதிகள் விடயத்தில் நிரந்தரத் தீர்வு எட்டப்படாவிட்டால் தாமும் அவர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதத்தில் குதிப்பர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கைதிகளுக்கு நீராகாரம் வழங்கி உண்ணாவிரத்தை முடித்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. – See more at: http://www.malarum.com/article/tam/2015/10/17/12216/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-.html#sthash.XKRPrju9.dpuf

Read more: http://www.malarum.com/article/tam/2015/10/17/12216/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-.html

Follow us: @malarumdotcom on Twitter | malarumdotcom on Facebook
© Copyright 2014 malarum.com

SHARE