உண்மையான சமாதானத்துக்காக கனடா, இலங்கைக்கு ஊக்கமளிக்கும்!- கனடா

282

32CF7D0500000578-3521861-image-a-89_1459716695769

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, இலங்கையில் உண்மையான சமாதானத்தை கொண்டுவருவதற்காக முன்வைத்த யோசனைகளை நிறைவேற்றுவதற்காக கனடா, தொடர்ந்தும் இலங்கைக்குஊக்கமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ருடீயு (Justin Trudeau) இதனை தெரிவித்துள்ளார்.

1983ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைநினைவுபடுத்தும் வகையில் உலகளாவிய ரீதியாக அனுஸ்டிக்கப்படும்; கறுப்பு ஜூலைநிகழ்வுகளில் கனடாவும் பங்கேற்பதாக கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையின் போரில் உயிர்நீத்த இலங்கையர்கள் அனைவருக்கும், தமிழர்எதிர்ப்பு நடவடிக்கையின்போது உயிர்நீத்த அனைவரின் குடும்பங்களுக்கும் தமது ஆழ்ந்ததுக்கங்களை பகிர்ந்து கொள்வதாக கனேடிய பிரதமர் கூறியுள்ளார்.

போரினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு பிரிவினை களையப்பட்டு ஒற்றுமைமேம்படுத்தப்படவேண்டும்.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, இலங்கையில் உண்மையானசமாதானம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றை கருத்திற்கொண்டு நிறைவேற்றியுள்ளயோசனையை முன்னெடுத்துச்செல்ல கனடா, இலங்கைக்கு ஊக்கமளிக்கும் என்றும் கனேடிய பிரதமர்தெரிவித்துள்ளார்.

SHARE