உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த உண்மைகள் கண்டறியப்படவேண்டும்-பிரதமர் ரணில்

244
உண்மைகளை கண்டறியும் பட்சத்தில் மாத்திரமே உண்மையான நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்த முடியும். அதற்காகவே நாம் முயற்சித்து வருகின்றோம். முன்னைய ஆட்சியாளர்களை போல் யாரையும் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் எண்ணம் எமக்கில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவி த்துள்ளார்.
ஆசிய மற்றும் பசுபிக் சட்டச் சங்கத்தின் 50ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லோஏசியா’ ஆசிய சட்ட மாநாடு நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்ட பத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பி ட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்ப தற்கான சட்டமூலத்தை, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகளின் பூரண ஆத ரவுடன் நிறைவேற்றியுள்ளோம்.
தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தி அதன் மூலம் தீர்வு காண்பதையே தேசிய அரசாங்கம் விரும்பு கின்றது. நாம் ஜனநாயகத்தை பலப்படுத்த முயற்சித்து வருகின்றோம். ஆனால் இராணுவத்தை காட்டி க்கொடுத்து இராணுவ நீதிமன்றில் அனைவரையும் நிறுத்தப்போவதாக விமர்சிக்கின்றனர்.
ஆனால் எக்காரணத்தை கொண்டும் எமது இராணுவத்தை தூக்குமேடைக்கு அனுப்ப நாம் அனுமதிக்க மாட்டோம்.அத்துடன், உண்மைகளை கண்டறிய வேண்டிய தேவையும் கட்டாயமும் எமக்கு உள்ளது. யுத்தத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் எமது இராணுவம் கொல்லப்பட்டனர். அதற்காக புலிகளை தண்டி க்க வேண்டும். ஆனால் தண்டிக்க இன்று நாட்டில் புலிகள் இல்லை.
ஆனால் இதே யுத்தத்தில் வடக்கிலும் கிழக்கிலும் பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் காணாமால்போயுள்ளனர். அனாவசியமாக நாட்டின் அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும், கொல்ல ப்பட்டும்,கடத்தப்பட்டும் இருந்தனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும்.
இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வுள்ளோம். உண்மைகளை கண்டறியும் பட்சத்தில் மாத்திரமே உண்மையான நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்த முடியும் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
SHARE