உண்மையை ஒப்புக்கொண்ட டோனி

256

Dhoni-1

டெஸ்ட் போட்டியை மிஸ் பண்றேன், ஆனால் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றது சரியான முடிவு என்று டோனி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணித்தலைவர் என்றால் அது டோனி தான்.

ஆனால் வெளிநாடுகளில் நடைப்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறமுடியாததால் ஏற்பட்ட நெருக்கடியால், கடந்த 2014-ம் ஆண்டு திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி அறிவித்தார்.

இந்நிலையில் குர்கானில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டோனி, டெஸ்ட் போட்டியை மிஸ் பண்றேன், ஆனால் ஓய்வு பெற்றது சரியான முடிவு. இதன் மூலம் குடும்பத்துடன் நேரம் செலவிட முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில் கிரிக்கெட் உடனான தொடர்பை யாராலும் விட முடியாது. கிரிக்கெட்டை விட்டு விலகிய பிறகும், எதாவது ஒரு வகையில் கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறோம்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவர்கள் என எதிர்பார்ப்பதாக டோனி தெரிவித்துள்ளார்.

SHARE