உதடுகள் அதிக சிவப்பாக இருந்தால் என்ன காரணம் தெரியுமா?

287

நமது உடலில் ஏற்படும் உடல்நல கோளாறுகளை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை நமது உதடுகள். உதடுகளின் நிறம் மாறுபடுவது உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அறிகுறியாகும்.

உதடுகளின் நிறத்தை வைத்தே உடல் பாதிப்பினை நாம் கண்டறிய இயலும்.

சிவப்பு நிறம்

உதடுகள் அதிக சிவப்பாக காணப்படுவது உடலில் உள்ள அதிகப்படியாக சூடு, கல்லீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் ஆகும்.

இதற்கு கிரிஸான்தமம் டீ, பாகற்காய் மற்றும் சிலரி ஆகியவற்றினை நமது உணவில் அதிகளவில் சேர்த்து கொள்ளவேண்டும். சரியான நேரத்தில் தூக்கம் மற்றும் டென்ஷன் இல்லாமல் இருப்பது மிக முக்கியமாகும்.

நீலம் அல்லது பச்சை நிற உதடுகள்

பொதுவாக பனிக்காலங்களில் இது சாதாரண ஒன்றாகும். ஆனால் தொடர்ந்து உதடுகள் இதே நிறத்தில் இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும். இது இதயநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

வெளிறிய நிறம்

வெளிறிய நிறத்தில் உதடுகள் காணப்பட்டால் இரத்தசோகையின் அறிகுறியாக கூட இருக்கலாம். அதிகளவு உடல் குளிர்ச்சி மற்றும் செரிமான மண்டலம் சீராக செயல்படாவிட்டாலும் உதடுகள் இந்நிறத்தில் காணப்படும்.

விட்டமின் சி மற்றும் அயர்ன் அதிகமுள்ள உணவுகளை அதிகளவு எடுத்து கொள்வது அவசியமாகும்.

அடர் சிவப்பிலிருந்து கருப்பு

உதடுகள் அடர் சிவப்பு நிறத்திலிருந்து கருப்பு நிறத்திற்கு மாறினால் செரிமான அமைப்பு அதிகளவு வேலை செய்வதாக அர்த்தம் அல்லது சரியாக வேலை செய்யவில்லை என்று அர்த்தமாகும்.

இதற்கு அதிகளவு பைபர் மற்றும் வெதுவெதுப்பான நீரில் லெமன் கலந்து குடிக்கவேண்டும். துரித உணவுகளை கட்டாயம் தவிர்க்கவேண்டும்.

அடர் சிவப்பு அல்லது ஊதா நிற கோடுகள்

உதடுகளை சுற்றி அடர் சிவப்பு அல்லது ஊதா நிற கோடுகள் காணப்பட்டால் உடலில் சமநிலை இல்லை என்று அர்த்தம். ஒரே சமயத்தில் அதிகளவு வெப்பம் மற்றும் குளிரை உணர்ந்தால் இத்தகைய மாறுபாடு உண்டாகும்.

இந்த அறிகுறிகள் காணப்பட்டால் காரமான உணவுகள், கேரட், உருளைக்கிழங்கு, மீன், பாதாம் போன்றவற்றினை தவிர்த்தல் நலம்.

இளஞ்சிவப்பு

உதடுகள் இளஞ்சிவப்பு நிறத்துடன் காணப்பட்டால் உடல் ஆரோக்கியமாக உள்ளதாக அர்த்தம்.

SHARE