குளிர்காலத்தில் சருமத்தில் உள்ள ஈரப்பசை குறைந்து விடுவதால், உதடுகளில் கருமை, வெடிப்பு போன்ற சருமப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இத்தகைய பாதிப்புகளை போக்கி உதடுகளின் மென்மை மற்றும் நிறத்தை அதிகரிக்க டிப்ஸ் இதோ,
உதட்டின் சிறப்பு நிறத்தை பெற என்ன செய்யலாம்?
- தேங்காய் எண்ணெய் அல்லது பாலை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் வறட்சி நீங்கி மென்மையாகும்.
- கிளிசரினை நேரடியாக உதடுகளில் தடவினால், உதட்டின் வறட்சி தடுக்கப்படுவதோடு, மென்மை தன்மை அதிகரிக்கும்.
- ஆலிவ் ஆயிலை முகம் மற்றும் உதடுகளுக்கு தடவி மசாஜ் செய்து வந்தால், சருமம், உதடுகளில் ஏற்படும் வறட்சி மற்றும் வெடிப்புகள் நீங்கும்.
- தேனை எலுமிச்சை சாறுடன் கலந்து முகத்தில் ஸ்கிரப் செய்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும்.
- வெறும் தேனை கொண்டு வறட்சி ஏற்படும் உதடுகளில் மசாஜ் செய்தால் உதடுகள் அழகான தோற்றமளிக்கும்.
- உதடுகளில் ஏற்படும் வறட்சியை தடுக்க நெய்யை கொண்டு உதடுகளில் தடவி வந்தால், உதடுகள் மென்மை மற்றும் நிறம் அதிகரிக்கும்.