உதயங்க வருவார் மகேந்திரன் வருவாரா?

109

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்து வருவார். ஆனால் மத்திய வங்கி பிணைமுறிமோசடி தொடர்பில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை பிரதமரால் அழைத்து வரமுடியுமா என சவால் விடுத்துள்ளது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்

மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள உதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு வந்து குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து உண்மைத் தன்மையை வெளியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுள்ளார். அர்ஜுன மகேந்திரன் இருக்கும் இடம் தனக்குத் தெரியாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

எனினும் உதயங்க விரைவில் நாடு திரும்பவுள்ளார். எனினும் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வர முடியுமா என பிரதமருக்கு சவால் விடுக்கிறோம்.

அர்ஜுன மகேந்திரன் நாட்டுக்கு வந்தால் பிரதமருக்கும் அவர் தலைமையிலான குழுவிற்கும் பாதிப்பு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அது அனைவருக்கும் தெரியும். ஆகவேதான் அவர் தொடர்ந்தும் சிங்கப்பூரில் தங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE