உதயங்க விரைவில் இலங்கை வருகின்றார்- சட்டத்தரணிகள்

178

ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்கவீரதுங்க விரைவில் இலங்கை திரும்பி நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜராவார் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

மிக்விமானக்கொள்வனவு மோசடி தொடர்பில் உதயங்கவீரதுங்க மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவரிற்கு எதிராக இன்டர்போல் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையிலேயே அவரது சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளனர்.

உதயங்கவிரைவில்  நாடு திரும்பி நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜராகதிட்டமிட்டுள்ளார் என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

உதயங்கவீரதுங்கவை தன்னால் இலங்கைக்கு அழைத்துவரமுடியும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சில நாட்களிற்கு முன்னர் கருத்து தெரிவித்திருந்த நிலையிலேயே சட்டத்தரணிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

SHARE