புதிகாக இனைத்துக்கொண்ட உதவி ஆசிரியர்களுக்கு வழங்கும் 6 ஆயிரம் ரூபாய் சம்பள கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் தெரிவித்தார்.
கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
கலாசாலையில் பயிற்சிநெறியைமேற்கொள்ள முடியாத நிலையில் புதிதாக கட்டிடமொன்றை அமைக்கும் வகையில் அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட 66 லட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வு 11.07.2016 காலை 9 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10 ரூபாய் கொடுப்பனவை ஆசிரிய உதவியாளர்களுக்கும் பெற்றுக்கொடுக்க அமைச்சரவை பத்திரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே எதிர்வரும் காலங்களில் பெற்றுக்கொடுக்கப்படும் ஆசிரிய பயிற்சி நெறியை சிறப்பாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மலைகத்தில் சிறந்த அசிரியர் சமூகத்தை உருவாக்கும் கொட்டகலை ஆசிரியர் பயிற்சி காலாசாலையில் ஏற்பட்ட இட நெருக்கடியை தீர்க்கும் வகையில் புதிய கட்டிடத்தை அமைக்க அடிக்கல் நாட்டினேன். தொடர்ந்தும் கலாசாலைக்கான அபிவிருத்தி நடவடிக்கையை முன்னெடுப்பேன் என்றார். நிகழ்வில் கலாசாலையின் அதிபர், பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரிய பயிலுனர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.