உபர் கிண்ண பாட்மின்டன்: 3-2 என ஜப்பானிடம் வீழ்ந்தது இந்தியா

290

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

உபர் கிண்ண பாட்மின்டன் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய பெண்கள் அணி இறுதியில் 2-3 என ஜப்பானிடம் தோல்வியடைந்துள்ளது.

சீனாவில் உள்ள குன்ஷான் நகரில், ஆண்களுக்கான தமாஸ் மற்றும் பெண்களுக்கான உபர் கிண்ண பாட்மின்டன் தொடர் நடக்கிறது.

பெண்களுக்கான உபர் கிண்ண போட்டியில் இந்தியா ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 16 ஆம் திகதி நடந்த முதல் போட்டியில் இந்தியா பெண்கள் அணி 5-0 என அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தியது.

17 ஆம் திகதி நடந்த இரண்டாவது போட்டியில் 5-0 என ஜேர்மனியை வீழ்த்தி காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது இந்தியா .

18 ஆம் திகதி நடந்த போட்டியில் இந்தியா- ஜப்பான் அணிகள் மோதின, இதில் மூன்று ஒற்றையர் போட்டிகள் நடந்தது, இதில் இந்தியா இரண்டு போட்டியிலும், ஜப்பான் ஒரு போட்டியிலும் வெற்றிப்பெற்றது.

இரட்டையர் போட்டியில் நடந்த இரண்டு போட்டியிலும் ஜப்பான் அணி வெற்றிப்பெற்றது, மொத்தம் நடந்த 5 போட்டியில் ஜப்பான் 3-2 என இந்தியாவை வீழ்த்தியது.

எனினும், முன்னதாகவே இந்தியா பெண்கள் அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் நாளை காலிறுதி சுற்றில் தாய்லாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.

SHARE