உபாலி தென்னக்கோன் தாக்குதல் சந்தேகநபரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

265

t3wlJGY

ரிவிர பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் உபாலி தென்னகோன்மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பிலும் குறித்த சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து நேற்று கம்பஹா நீதிமன்றில் நடைபெற்ற விசாரணைகளில் குறித்த சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது குறித்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு சாஜன் மேஜரை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா மேலதிக நீதவான் லலித் கன்னங்கர உத்தரவிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சாட்சியாளர்களாக குறிப்பிடப்பட்டுள்ள ஆறு சாட்சியாளர்களில் ஆறாம் சாட்சியாளர் நேற்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது சந்தேகநபரை அடையாளம் காண தவறிவிட்டார்.

தாக்குதலுக்கு இலக்கான உபாலி தென்னக்கோன் அவரது மனைவி மல்காந்த உள்ளிட்ட மேலும் ஐந்து பேர் எதிர்வரும் 29ஆம் திகதி அடையாள அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர்.

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் உபாலி தென்னக்கோன் குடும்பம் வழக்கு விசாரணைகளுக்காக இலங்கை வரவுள்ளதாக அவர்களது சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்தவழக்கு எதிர்வரும் 29ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

SHARE