உயரதிகாரியொருவரைத் தாக்கிய பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்சை பொலிசில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
கல்கிஸ்சை பொலிசில் பணியாற்றிய களுபத்திரணகே என்ற சப் இன்ஸ்பெக்டர் தனது மேலதிகாரியுடனான வாக்குவாதத்தின்போது அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், அதனையடுத்து இன்று காலை முதல் குறித்த சப்இன்ஸ்பெக்டர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கல்கிஸ்சை பொலிசில் சிறுகுற்றங்கள் தொடர்பான பிரிவின் பொறுப்பதிகாரியே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.