
ஆண்களின் நிறம் கருப்பாக இருந்தால் பரவாயில்லை ஆனால், உயரும் குறைவாக இருக்கக் கூடாது என்று பெண்கள் நினைப்பார்கள். அப்படி நினைப்பதற்கு பல காரணங்கள் உள்ளது.
பெண்கள் உயரமான ஆண்களை விரும்புவது ஏன்?
- உயரமான ஆண்களிடம் பெண்கள் இயல்பாகவே ஒருவித பாதுகாப்பை உணர்கிறார்கள். உயரமான ஆண் தன்னருகே இருந்தால், யாரும் தங்களை சீண்ட மாட்டார்கள் என்ற எண்ணம் பெண்களிடம் உள்ளது.
- படுக்கை அறையில் உறங்கும் போது, அவர்களது மார்பு, கால் பகுதிகளுக்குள் ஒரு குட்டி பறவை போல சுருங்கி படுத்து உறங்குவதை பெண்கள் விரும்புவார்கள்.
- திடீரென மழை வந்துவிட்டால், உயரமான ஆண்கள் குடை பிடிக்கும் போது, தலையின் மீது படாமல், ஜாலியாக நடந்து செல்லலாம்.
- பெரிய அளவில் நடக்கும் ஏதேனும் விழாக்களுக்கு செல்லும் போது, நம்மை கூட்டத்தில் உயரமான ஆண்களால் ஈஸியாக கண்டுபிடிக்க முடியும்.
- நடந்து செல்லும் போது கைகளை பிடித்து செல்வது போன்ற சின்ன சின்ன அழகான விடயங்களுக்காகவே உயரமான ஆண்களை பெண்கள் விரும்புகின்றனர்.
- உயரமான ஆண்களை கட்டிப்பிடிக்கும் போது அவர்களது இதய துடிப்பை கேட்க முடியும். அவர்களது இதயமும், பெண்களது காதும் ஒரே உயர நிலையில் இருப்பதை பெண்கள் விரும்புகின்றனர்.
- உயரமான ஆண்கள் வீட்டில் பல உதவிகளுக்கு சரியான தேர்வாக இருப்பார்கள். மேலடுக்கில் வைத்த பொருட்களை எடுக்க, வைக்க, சில அடிப்படை வீட்டு மேலாண்மை வேலைகள் செய்ய உதவியாக இருக்கும்.
- உயரமான ஆண்களின் கால்கள் நீளமாக இருக்கும். உட்காரும் போது கூடுதல் ஸ்டைலாக இருக்கும். ஒரு கூட்டில் தஞ்சம் புகுந்தது போல, அவர்கள் காலுக்கு நடுவே அமர்ந்தவாறு ரொமாண்டிக் செய்வதை பெண்கள் விரும்புவார்கள்.
- உயரமான ஆண்களை காணும் போது ஒரு ஈர்ப்பு இருக்கும். கருப்பு, வெள்ளை என்று எந்த வேறுபாடுமின்றி அவர்கள் கொஞ்சம் கூடுதல் ஈர்ப்புடன் தோற்றமளிப்பார்கள்.