நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பணிகளின் முதற்கட்டம் இன்று ஆரம்பமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 11ஆம் திகதி வரை 31 மத்திய நிலையங்களில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக இதில் மதிப்பீட்டு சபைகள் ஊடாக 6876 ஆசிரியர்கள் கடமையாற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்போது 6 பாடசாலைகள் முற்றாக மூடப்படுவதாகவும், 21 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படவுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை நடந்து முடிந்த 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகளும் அடுத்த மாதம் 3ஆம் திகதி முதல் 40 பரீட்சை மத்திய நிலையங்கள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 35 பாடசாலைகள் முற்றாக மூடப்படவுள்ளதோடு,4 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர்.டபிள்யு.எம்.என்.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.