உயர்தரப் பரீட்சை மீள்மதிப்பீடு விண்ணப்பங்கள் – பெப். 05ம் திகதிக்கு முன் சமர்ப்பிக்கவும்

338
தற்போது வெளியிடப்பட்டுள்ள 2015ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்த பரீட்சை விடைத்தாள்களை மீளவும் மதிப்பீடு செய்ய வேண்டுமென விரும்பும் பரீட்சார்த்திகள் பெப்ரவரி மாதம் 5ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான மீள்மதிப்பீட்டு விண்ணப்பங்கள் பெறுபேறுகளுடன் அதிபருக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பப்படிவங்கள் தேசிய பத்திரிகைகளில் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். விண்ணப்பப்படிவங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து பரீட்சை திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு அவர் கோரியுள்ளார்.

1302969405book

SHARE