உயர்தர மாணவர்களுக்கான பிந்திக் கிடைத்த முக்கிய அறிவித்தலொன்று!

184

நடைபெற்றுவரும் க.பொ.த உயர்தரப் பரீட்சை நேர அட்டவணையில் பிரச்சனைகள் இருக்குமாயின் அது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக மாணவர்களுக்கு சில தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி நேர அட்டவணை தொடர்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் 011 2 78 42 08, 011 2 78 45 37 அல்லது 1911 ஆகிய தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாடு முழுவதிலும் பரீட்சை நிலையங்களில் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது.

சில பரீட்சார்த்திகள் பரீட்சை தொடர்பான பாடங்கள் மற்றும் நேரம் குறித்து உரிய புரிந்துணர்வுடன் இல்லாமல் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சமூகமளிப்பது தொடர்பான சம்பங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE