மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் தாக்கப்பட்டமை தொடர்பில், இலங்கை அரசாங்கம் கண்டத்தை வெளியிட்டுள்ளது.
கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து அன்சார், மஹிந்த ராஜபக்சவின் எதிர்ப்பாளர்களால் இன்று தாக்கப்பட்டார்.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம், கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் ராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.