இனம், மதம், மொழி இவற்றையெல்லாம் தாண்டி இரண்டு மனங்கள் ஒன்று சேர்வது தான் காதல் என்று சொல்வார்கள்.
இதற்கு அடுத்த பழமொழியாக, காதலுக்கு கண்ணில்லை என்பார்கள், ஆனால் இங்கு, ஒருவரின் காதலுக்கு உயிர் கூட இல்லை.
அந்த அளவுக்கு உயிரற்ற ஒரு பொம்மையை தனது உயிரை கொடுத்து காதலித்து வருகிறார் இந்த ஜப்பான் நபர்.
பாலியல் பொம்மை(Sex Doll)
சீனாவால் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாலியல் பொம்மை, சிலிகானால் வடிவமைக்கப்பட்டுள்ளது, நிஜ மனிதர்கள் போன்று காட்சியளிக்கும் இந்த பொம்மைகளில், ஆண் பெண்களுக்கு உள்ள உறுப்புகளை போன்றே மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கபட்டு உள்ளன.
பார்ப்பவர்களுக்கு பாலியல் உணர்வை தூண்டும் இந்த பொம்மை தற்போது சீன சந்தைகளில் அதிகமாக விற்கப்பட்டு வருகிறது.
ஒரு வடத்திற்கு மட்டும் 100 billion yuan தொகை அளவுக்கு இந்த பாலியல் பொம்மையால் வருவாய் கிடைக்கிறது என ChinaSexQ.com மதிப்பிட்டுள்ளது.
இதன் மீது கூட காதலா?
ஜப்பான் நாட்டை சேர்ந்த Senji Nakajima(61) என்பவருக்கு திருணமாகி 2 குழந்தைகள் உள்ளனர், திருமண உறவில் விரிசல் ஏற்பட்ட காரணத்தால் கடந்த 6 ஆண்டுகளாக தனிமை வாழ்க்கை வாழ்ந்த வந்த இவருக்கு வாழ்வில் விரக்தி ஏற்பட்டுள்ளது.
அப்போது, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சிலிகானால் செய்யப்பட்ட இந்த பாலியல் பொம்மையை சந்தையில் இருந்து வாங்கியுள்ளார், அந்த பாலியல் பொம்மையின் பெயர் Saori, சுமார் 6 மாதங்கள் அந்த பொம்மையுடன் வாழ்க்கையை கழித்து வந்த இவருக்கு, அதன் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது,
இந்த ஈர்ப்பானது ஒரு கட்டத்தில் காதலாக மாறியுள்ளது, ஆம் பாலியல் பொம்மை மீது கண்மூடித்தனமாக காதல் கொள்ள ஆரம்பித்தார் இந்த மாமனிதர், அந்த பொம்மையை திருமணம் செய்து கொண்டார்.
தனது தனிமை வாழ்கையில் இனிமையை ஏற்படுத்திய இவள், சிலிகானால் செய்யப்பட்ட வெறும் பொம்மை மட்டுமல்ல எனது வாழ்கையில் சந்தோஷத்தை நிரப்ப வந்த தேவதை என கூறுகிறார்.
மாலை வேளையில், இந்த பொம்மையை இரு சக்கர வண்டில் அமர வைத்துக்கொண்டு நடைபயிற்சி மேற்கொள்கிறார், அங்கு செல்லும் இவர், இயற்கை காட்சிகளை தனது பாலியல் பொம்மையுடன் சேர்ந்து ரசித்து பார்க்கிறார்.
அதுமட்டுமின்றி, படுக்கையை கூட பாலியல் பொம்மையுடன் பகிர்ந்துகொள்ளும் இவர், அந்த பொம்மையை குளிப்பாட்டுவது, வண்ண வண்ண ஆடைகளை வாங்கி அணிவது, மேலும் அலங்கார விடயத்தில் தனது துணைக்கு, விதவிதமான தலைமுடிகளை வாங்கி மாட்டிவிடுகிறார்.
பிற பெண்களை திருமணம் செய்துகொண்டு, அவர்களிடம் அன்பை எதிர்பார்த்தால், அப்பெண்கள் நம்மிடம் பணத்தை எதிர்பார்க்கிறார்கள், ஆனால் இவள் அதை எவற்றையும் எதிர்பார்ப்பதில்லை, எனவே இவளோடு வாழ்வதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என கூறுகிறார் இந்த காதல் பித்தன்.