உயிரினங்கள் வாழ தகுதியான புதிதாக 20 கிரகங்கள் கண்டுபிடிப்பு

467

 

 

 

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் புதிதாக 20 கிரகங்களை கண்டறிந்துள்ளது, இவை உயிரினங்கள் வாழ தகுதியான கிரகங்களாகும் என தெரிவித்துள்ளது.

நாசா மையம், ‘கெப்லர்’ எனும் டெலஸ்கோப் மூலமாக புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இப்போது கண்டுபிடிக்கப்பட்ட 20 கிரகங்களில் வேற்று கிரகவாசிகள் வசிக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் கே.ஓ.ஐ-7923.01 என்ற கிரகம் பூமியை போல 97 சதவீத பரப்பளவு கொண்டதாகவும், குளிர்ச்சியான காலநிலையை கொண்டதாகவும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அந்த கிரகத்தில் இதமான வெப்பம், குளிர்ச்சியான தண்ணீர் மற்றும் 70 முதல் 80 சதவீத அளவில் திட படிவங்களும் உள்ளன.

கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகங்கள் பலவற்றில் சூரியனை போன்று நட்சத்திர சுற்று வட்ட பாதைகள் உள்ளதாகவும், சில கிரகங்கள் சூரியனை 395 நாட்களிலும், சில கிரகங்கள் 18 நாட்களிலும் சுற்றி வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

SHARE