உயிரை காப்பாற்றுங்கள் என ரத்த வெள்ளத்தில் கதறிய நபர் வீடியோ எடுத்த மனித மிருகங்கள்

224

கர்நாடக மாநிலத்தில் விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் உயிருக்கு போராடியபடி என்னை காப்பாற்றுங்கள் என கெஞ்சியும் சுற்றியிருந்த பொதுமக்கள் அவரை காப்பாற்றாமல் அதனை வீடியோ எடுத்த காட்சி மனிதாபிமானமற்ற போக்கையே காட்டுகிறது.

சகாபுதீன் என்பவர் டைல்ஸ் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். வழக்குபோன்று வேலை செய்யும் இடத்திற்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் விபத்தில் சிக்கியுள்ளார்.

இதில் அன்வர் அலி அரசு பேருந்து சிக்கிக்கொண்டார். அவரை, சில அடி தூரம் வரை பஸ் தரதரவென இழுத்து சென்றதால் அன்வர் அலியின் வயிற்று பகுதி நசுங்கியது.

தரையில் விழுந்து உயிருக்கு போராடிய இவர், என்னை காப்பாற்றுங்கள், என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என ரத்த வெள்ளத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

ஆனால், சுற்றியிருந்த பொதுமக்கள் ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்தவாறு நின்றுள்ளனர். இதில் ஒரு சிலர் அவரை வீடியோ எடுத்துள்ளனர். 30 நிமிடம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அவசர ஊர்தியின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு இவருக்கு 7 பாட்டில் ரத்தம் செலுத்தியும் இவரது உயிரை காப்பாற்றமுடியவில்லை. கால தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டு வந்ததுதான் இதற்கு காரணம் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து பேருந்து டிரைவர் கல்லையா சேகர் என்பவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

உயிருக்கு போராடிய வாலிபரை காப்பற்றாமல் பொதுமக்கள் வீடியோ எடுத்த சம்பவம் , மனிதர்கள் வடிவத்தில் அரக்க குணம் கொண்ட மிருகங்கள் இந்த பூமியில் இருப்பதையே காட்டுகிறது.

SHARE