கனடா நாட்டில் பெண் ஒருவர் உயரத்திலிருந்து குதித்து விளையாடும் போட்டியில் உயிரை பறிகொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்கேரி நகரை சேர்ந்த KristinRenee Czyz(34) என்ற பெண் அபாயகராமன விளையாட்டுகளில் ஈடுபடுவதில் அதீத ஆர்வம் உடையவர்.
கட்டிடம் அல்லது உயரமான பாலங்களிலிருந்து பாராசூட் கட்டிக்கொண்டு குதித்து அனைவரையும் வியக்க வைப்பதில் வல்லவர்.
ஆனால், இதே விளையாட்டு அவரது உயிரையும் பறித்துள்ளது.
கடந்த மே 13ம் திகதி பாராசூட்டை எடுத்துக்கொண்டு புறப்பட்ட அவர், இதே நகரில் உள்ள Perrine என்ற உயரமான பாலத்தில் இருந்து குதிக்க முடிவு செய்துள்ளார்.
உயரத்திலிருந்து குதிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்திருக்க அவர் உற்சாகமாக குரல் கொடுத்துக்கொண்டு குதித்துள்ளார்.
ஆனால், அவரது முதுகில் இருந்த பாராசூட்டை இயக்க முடிந்தபோது அது செயல்படாத காரணத்தினால் அதிவேகமாக கீழே உள்ள ஆற்றில் விழுந்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அனைவரும் ஆற்றில் குதித்து அவரை மேலே தூக்கி வந்துள்ளனர். ஆனால், மிகவும் உயரமான இடத்திலிருந்து குதித்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த உயிரிழப்பு தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தியதில் ஒரு உண்மை வெளியாகியுள்ளது.
பொலிசார் நேற்று வெளியிட்ட அந்த அறிக்கையில், பெண் தன்னுடைய முதுகில் வைத்திருந்த சிறிய பாராசூட் பையில் துளை ஏற்பட்டு இருந்ததால், அகலமாக விரிக்கும் பாராசூட்டை இயக்க முடியாமல் போய்விட்டது என தெரியவந்துள்ளது.
எனவே, பெண் உயிரிழந்தது ஒரு எதிர்பாராத விபத்து எனக்கூறி பொலிசார் விசாரணையை முடித்துள்ளனர்.